This Article is From Jan 10, 2019

அதிர வைக்கும் தமிழ்ராக்கர்ஸ்! - ’விஸ்வாசமும்’ வெளியானது!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் இன்று (ஜன.10) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

அதிர வைக்கும் தமிழ்ராக்கர்ஸ்! -  ’விஸ்வாசமும்’ வெளியானது!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ரஜினியின் ‘பேட்ட', அஜித்தின் ‘விஸ்வாசம்' படங்கள் இன்று (ஜன.10) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பேட்ட' திரைப்படமும், சிவா - அஜித் வெற்றி கூட்டணியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1090 தியேட்டர்களையும் இந்த இரு படங்களும் ஆக்கிரமித்துள்ளன. இருவரது படங்களும் சமமாக 450 முதல் 500 அரங்குகளிலும் வெளியாகியுள்ளது. மேலும், வெளியான அனைத்து தியேட்டர்களிளும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள் என்று களை கட்டி உள்ளன.

மேலும் படிக்க: தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 'பேட்ட' - அதிர்ச்சியில் படக்குழுவினர்!

தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களின் ஆரவாரத்துடன் பேட்ட, விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சிகள், திரையிடப்பட்டன.

இதற்காக, நேற்றிரவு முதலே திரையரங்குகளில் குவியத் தொடங்கிய ரஜினி, அஜித் ரசிகர்கள் மேளம், தாளம் முழங்க ஆடி பாடியும், கொண்டாடியபடியே முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். ஒரு சில இடங்களில் விஸ்வாசம் திரைப்படம் நள்ளிரவு 1 மணி அளிவிலே திரையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இரண்டு படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், எந்தப் படமாக இருந்தாலும், படம் ரிலீஸான அன்றையே தினமே அந்த படத்தை தங்களது இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்ட தமிழ்ராக்கர்ஸ் இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களையும் தங்களது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. இதனால், இரண்டு படங்களின் படக்குழு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியல் உள்ளது.

ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இருவருமே போஸ்டர்கள், பேனர்கள் வைத்து தங்களது தலைவர்கள் படத்தை பெரும் பொங்கல் திருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், தமிழ்ராக்கர்ஸில் படம் வெளியானதால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

.