This Article is From Jan 17, 2019

சீட் பெல்ட்,ஹெல்மெட் காட்சிகள் - பாராட்டு மழையில் 'விஸ்வாசம்' டீம்.

பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

சீட் பெல்ட்,ஹெல்மெட் காட்சிகள் - பாராட்டு மழையில் 'விஸ்வாசம்' டீம்.

ஹைலைட்ஸ்

  • விஸ்வாசம் படம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் வருகிறார் அஜித்.
  • அஜித், நயன்தாரா இருவமே ஹெல்மெட் அணிந்து டூவீலரில் செல்கின்றனர்
  • விஸ்வாசம் டீமுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

விஸ்வாசம் படம் கடந்த 10-ம்தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் படம் முழுவதும் அஜித் ஹெல்மெட் அணிந்து டூ வீலரில் வலம் வருகிறார். ஒரு காட்சியில் பின் சீட்டில் இருக்கும் நயன்தாராவே ஹெல்மெட் அணிந்திருப்பார்.

டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை ஏராளமான விழிப்புணர்வு விளம்பரங்களை செய்துள்ளது. அதனை சிம்ப்பிளாக இந்த படத்தில் மூலம் மக்களிடம் சேர்த்திருக்கிறது விஸ்வாசம் படக்குழு. இதனை சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

 

''சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

இவ்வாறு காவல்துணை ஆணையர் சரவணன் கூறியுள்ளார்.

.