This Article is From Jul 11, 2018

தாய்லாந்து குகையில் இருந்த சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்

தாய்லாந்தில் உள்ள தாம் லூயங் குகையில், கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 இளம் வீரர்களும், அவர்களது பயிற்சியாளரும் கடந்த 18 நாட்களாக சிக்கி இருந்தனர்

தாய்லாந்து குகையில் இருந்த சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்
Pune:

புனே : தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட சம்பவத்தில் இந்திய நிறுவனம் ஒன்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள தாம் லூயங் குகையில், கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 இளம் வீரர்களும், அவர்களது பயிற்சியாளரும் கடந்த 18 நாட்களாக சிக்கி இருந்தனர்.

அவர்களை மீட்கும் பணியில் உலகத்தின் பல நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்களும், பல்வேறு நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பத்தை அளித்து உதவின.

இந்த மீட்பு முயற்சியில், இந்தியாவைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனமும் தங்களது நீரை வெளியேற்றுவதற்கான (dewatering) தொழில்நுட்பத்தை மீட்புப் பணிக்காக வழங்கியது.

இதுகுறித்து புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரகம் மூலமாக எங்களது தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி கேட்டதும் இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து எங்கள் நிறுவன பொறியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து தாம் லூயாங் குகையின் மீட்புப்பணியில் நீரை வெளியேற்றுவதற்கான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

.