அதிமுகவில் முடிவெடுக்கும் இடத்தில் தம்பிதுரை இல்லை என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பாஜகவுடன் நல்ல நட்போடுதான் இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதிமுக கொள்கை உடைய கட்சி, பாஜகவைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது.
பாஜகவைக் சுமத்து கொண்டு காலூன்ற வைக்க, அதிமுக என்ன பாவமா செய்தது? பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை. தேர்தல் வரும் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அதிமுக கட்சியைக் வளர்க்க நாங்கள் பாடுபடுவோமே தவிர, இன்னொரு கட்சியை வளர்க்க நாங்கள் பாடுபட மாட்டோம் என்றார்.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,
பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரை மக்களவை சபாநாயகராக தொடர்வது ஏன்? அதிமுகவில் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தம்பிதுரை இல்லையே. அவர் அப்படி முடிவில் இருக்கு போது எதற்காக சபாநாயகர் பதவியை தொடர்கிறார் என்பது தெரியவில்லை.
அதிமுகவில் விரக்தியடைந்த மனநிலையில் அவர் பேசுகிறார் என்று நினைக்கிறேன். தம்பிதுரை தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் அதனால், இது குறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறினார்.