This Article is From Sep 25, 2018

சிறுமி பலாத்கார வழக்கு: 3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கடந்த 2015 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தானே கஜூவாடி பகுதியில் இருந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது

சிறுமி பலாத்கார வழக்கு: 3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் (படம்: சித்தரிக்கப்பட்டவை)

Thane:

மகாராஷ்டிரா: கடந்த 2015 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தானே கஜூவாடி பகுதியில் இருந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரம் வீட்டினுள் புகுந்த தேவேந்திர குப்தா என்ற நபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிந்தவுடன், காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தேவேந்திர குப்தாவை கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேவேந்திர குப்தாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், உத்தரவு இன்ற வீட்டினுள் புகுந்த குற்றத்திற்காக 1 ஆண்டு கடுங்காவல் சிறையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவம் நடக்கும் போது சிறுமிக்கு 16வயது என்பதால், பாலியல் பலாத்காரம் செய்யும் போது சிறுமி ஒப்புக்கொண்டார் போன்ற வாதங்கள் நீதிமன்ற சட்டத்திற்கு முன் செல்லாது என்று நீதிபதி குறிப்பிட்டு உத்தரவிட்டார்.

.