விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம்.
நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் வேன் மீதேறி நின்று எடுத்த செல்ஃபியை, நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிகில் படத்தின் வசூல் குறித்து கடந்த புதன் அன்று நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியனர் ஜி.என். அன்புச்செழியன் ஆகியோரின், வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடந்தினர்.
அதில், நடிகர் விஜய் மற்றும் ஏஜிஎஸ் குழுமத்திடமிருந்து எந்தவித ஆவணமும், ரொக்கமும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல் வெளியானது
ஆனால், பைனாசியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து ரூ. 77 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐடி ரெய்டு முடிந்ததும், அடுத்த நாளே நடிகர் விஜய் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்தார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் என்.எல்.சியில் குவிந்து, ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அதையடுத்து, அங்கு குவிந்த தன் ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துகொண்டார் விஜய். அந்த விடியோக்கள் இணையத்தில் பரவியது.
இந்த நிலையில் வேனில் ஏறி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை விஜய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.