This Article is From May 11, 2019

11 மில்லியன் பின் தொடர்பாளர்கள்: நன்றி சொன்ன பாஜக ஐடி விங்க்

பாஜக அரசியல் எதிரியான காங்கிரஸை விட இரண்டு மடங்கு கூடுதலாக பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் 5.14 மில்லியன் பின் தொடர்பாளர்களைக்  கொண்டுள்ளது. 

11 மில்லியன் பின் தொடர்பாளர்கள்: நன்றி சொன்ன பாஜக ஐடி விங்க்

47.2 மில்லியன் பேர் பிரதமர் நரேந்திர மோடியை பின் தொடர்கிறார்கள்

New Delhi:

பாஜகவின் ட்விட்டர் பக்கதை பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 11 மில்லியனை எட்டியுள்ளது. இதற்காக பாஜக நன்றி தெரிவித்துள்ளது. அமித் மால்வியா பாஜகவின் ஐடி விங்கின் தலைவராக இருந்து வருகிறார். அவர் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

பாஜக அரசியல் எதிரியான காங்கிரஸை விட இரண்டு மடங்கு கூடுதலாக பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் 5.14 மில்லியன் பின் தொடர்பாளர்களைக்  கொண்டுள்ளது. 

47.2 மில்லியன்  பேர் பிரதமர் நரேந்திர மோடியை பின் தொடர்கிறார்கள். உலகில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்ட அரசியல்வாதியாக மூன்றாவது இடத்தில் மோடி உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு மட்டுமே 106 மில்லியன் ட்விட்டர் பின் தொடர்பாளர்கள் உண்டு. அதன் பின் டொனால்ட் ட்ரம்ப் (60.2 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உண்டு. 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு 9.4 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உண்டு. பிரதமர் மோடி ட்விட்டர் மட்டும் அதிக பின் தொடர்பாளர்களை கொண்டிருக்கவில்லை. பேஸ்புக், ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிளாட்பார்ம்களில் 110,912,648 மில்லியன் பார்வையாளர்களை சந்தித்துள்ளார்.

ஒபாமா அவரது ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் 182,710,777 பின் தொடர்பாளர்களைக் கொண்டு முன்னணியில் உள்ளார். 

.