New Delhi: ஓர் பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. 1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட, 377 சட்டப் பிரிவு, இயற்கைக்கு முரணான வகையில் பாலினச் சேர்க்கையை குற்றம் என்று கூறுகிறது. இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ஓர் பாலின ஈர்ப்பு குற்றமான செயல் அல்ல’ என்று தீர்ப்பு வந்தது. ஆனால் 2013-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் தான் இந்த விஷயம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தான் இன்று தீர்ப்பு வந்துள்ளது. 5 பிரபலங்கள் தான் 377வது பிரிவுக்கு எதிராக மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தனர்.
அவர்கள் குறித்த தகவல்:
1. நவதேஜ் சிங் ஜோஹர், 59. இவர் சங்கீத் நாதக் அகாதமி விருது பெற்ற கிளாசிக்கல் டான்சர். உச்ச நீதிமன்றத்தில் 377வது பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜோஹர், ‘சட்ட சாசனத்தில் இருக்கும் வாழ்வதற்கான உரிமையையும் சுதந்திரத்துக்கான உரிமையையும் இந்தச் சட்டம் மறுக்கிறது’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அசோகா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பேராசிரியராக இவர் பணி புரிந்து வருகிறார்.
2. சுனில் மேரா, 63. இந்தியாவில் வெளி வரும் மேக்சிம் இதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மேரா. இவர் நடிகரும் கூட. தூர்தர்ஷனில் வரும் ‘சென்டர்ஸ்டேஜ்’ என்கின்ற நிகழ்ச்சியை இயக்கி, தயாரித்து, எழுதி, வழங்கியுள்ளார் மேரா. ஸ்டூடியோ அப்பாஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
3. ரித்து டால்மியா, 45. மிகவும் பிரபலமான செஃப் இவர். டால்மியா, திவா என்கின்ற தொடர் உணவகங்களின் உரிமையாளர் ஆவார். பல புத்தகங்களை எழுதிய இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஹோஸ்ட் செய்துள்ளார்.
4. அமன்நாத், 61. இவர் நீம்ரானா தொடர் உணவகங்களின் உரிமையாளர் ஆவார். வரலாறு மற்றும் கட்டுமானத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், கலை மற்றும் வரலாறு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். அமன்நாத், கவிதைகளையும் சரளமாக எழுதக் கூடியவர்.
5. அயீஷ் கபூர், 23. இவர் நடிகரும் தொழில் அதிபரும் ஆவார். ‘பிளாக்’ படத்தில் ராணி முகர்ஜியின் இள வயத கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கபூர். அந்தப் படத்தில் நடிக்கும் போது கபூருக்கு 9 வயதே ஆனது. அந்த கதாபாத்திரத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார் கபூர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்து வருகிறார் அயீஷ் கபூர்.