Read in English
This Article is From Feb 09, 2019

சந்திரபாபு நாயுடுவின் டெல்லி போராட்டம்; மக்களை அழைத்துச் செல்ல ரூ.1.12 கோடி செலவு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளார்.

Advertisement
இந்தியா

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஆந்திராவில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சந்திரபாபு அழைப்பு விடுத்துள்ளார்.

Highlights

  • பிப்ரவரி 11-ம் தேதி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது
  • அனந்தாபூர் & ஸ்ரீகாகுளத்திலிருந்து ரயில்கள் புறப்படும்
  • ஆந்திராவுக்கு 'சிறப்பு அந்தஸ்து' கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது
Amaravati:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளார். அந்தப் போராட்டத்தில் ஆந்திராவிலிருந்து மக்களை அழைத்துச் செல்ல இரண்டு ரயில்களை, அம்மாநில அரசு முன்பதிவு செய்துள்ளது. அதற்கான செலவு மட்டும் 1.12 கோடி ரூபாய் என்று தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்களை வாடகைக்கு எடுக்க, ஆந்திர மாநில அரசே நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய ரயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்களை ஆந்திர அரசு, முன்பதிவு செய்துள்ளது. 

ஆந்திராவின் அனந்தாபூர் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களிலிருந்து இந்த இரண்டு ரயில்களும் டெல்லி நோக்கி புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பயணம் செய்வார்கள் என்று தெரிகிறது. பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு இரண்டு ரயில்களும் டெல்லியை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.  

Advertisement

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அம்மநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெகு நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை என்பதால், 11 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளார். 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஆந்திராவில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சந்திரபாபு அழைப்பு விடுத்துள்ளார். ஆகவே, பல்வேறு அரசியல் கட்சியினரும் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தே.ஜ.கூ கூட்டணியில்தான் தெலுங்கு தேசம் இருந்தது. ஆனால், ‘சிறப்பு அந்தஸ்து' கொடுக்காததை கண்டித்து நாயுடு, கூட்டணியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement