This Article is From May 12, 2019

“தீவிரவாதிகளை சுடுவதற்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி கேட்பரா?”- பிரதமர் மோடி

யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், “மோடியின் ராணுவம்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது சர்ச்சைக்கு உள்ளானது

“தீவிரவாதிகளை சுடுவதற்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி கேட்பரா?”- பிரதமர் மோடி

இந்த முறை தேர்தலை ஆளும் பாஜக தரப்பு, தேசியவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை முன் வைத்து சந்தித்து வருகிறது.

Kushinagar, Uttar Pradesh:

இன்று காலை ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியானில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ராணுவ வீரர்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருப்பார்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தெற்கு காஷ்மீரில், தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்ற போது, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் போதுதான் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு சென்ற வாரம் தேர்தல் நடந்து முடிந்தது. இன்று ஆறாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

உத்தர பிரதேச மாநிலத்தின் குஷிநகரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாதிகள், எதிரே துப்பாகியுடனும் வெடிகுண்டுகளுடனும் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் எமது ராணுவ வீரர்கள், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப் போவார்களா. நான் வந்த பிறகு, காஷ்மீரில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதான் என் பாணி” என்று பரப்புரை ஆற்றினார். 

இந்த முறை தேர்தலை ஆளும் பாஜக தரப்பு, தேசியவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை முன் வைத்து சந்தித்து வருகிறது. இன்று காலை நடந்து அதிரடி என்கவுன்ட்டர் பற்றி எந்த எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பாத நிலையில், பிரதமரின், “எனது வீரர்கள்” என்ற கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. 

முன்னதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், “மோடியின் ராணுவம்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் எதிர்கட்சிகள் புகார் அளித்தன. பாதுகாப்புப் படையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜம்மூ காஷ்மீர் புல்வாமா தாக்குதல், பாலகோட் விமானப் படை தாக்குதல் மற்றும் ராணுவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரங்களின் போது பேசியதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி பேசியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

.