This Article is From Jan 03, 2019

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதை பாஜக ஒருபோதும் ஏற்காது: தமிழிசை

இந்துமத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் 2 பெண்கள் சபரிமலை சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதை பாஜக ஒருபோதும் ஏற்காது: தமிழிசை

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சபரிமலைக்கு பெண்கள் வேண்டுமென்றே சென்றுள்ளனர், இந்து மத உணர்வை சீர்குலைக்கவே 2 பெண்களும் சென்றுள்ளனர். சபரிமலைக்கு எதிராக என்று சொல்லிக்கொண்டு, மாற்று மதத்தை சேர்ந்தவர்களை நிற்க வைத்து இந்து மத உணர்வுகளை இடறியுள்ளனர்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதை பாஜக ஒருபோதும் ஏற்காது. போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்களை கோவிலுக்குள் அழைத்துச்சென்று நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட்டுகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த உணர்வு திமுக, விடுதலை சிறுத்தைகள் என எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் உள்ளனர், ஆக இந்த கட்சி தலைவர்களும் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
 

.