அடுத்த மாதம் 7 ஆம் தேதி ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது
New Delhi: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல முக்கிய தலைவர்களின் பெயர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஷோக் கெலோட், சர்தர்புரா தொகுதியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோன்க் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகிறார்கள்.
தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கிரிஜா வியாஸ், உதய்பூரிலிருந்தும், மூத்த காங்கிரஸ் தலைவர் சிபி ஜோஷி, நத்வாரா தொகுதியிலிருந்தும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பரேவையின் எதிர்கட்சித் தலைவர் ராமேஷ்வர் லால் டூடி, நோகா தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார்.
பாஜக-விலிருந்து விலகி சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸில் இணைந்த ஹரிஷ் மீனா, டியோலி உனியாரா தொகுதியின் வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகுலு வாஸ்னிக், வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார்.
அடுத்த மாதம் 7 ஆம் தேதி ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது.