Read in English বাংলায় পড়ুন
This Article is From Dec 12, 2018

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்: 10 முக்கியத் தகவல்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைக்க, அம்மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் உரிமைகோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement
இந்தியா

மத்திய பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலிடம், ம.பி காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது

Bhopal:

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைக்க, அம்மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் உரிமைகோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114-ல் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க 116 தொகுதி வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில்தான் மாயாவதி, காங்கிரஸுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இது குறித்த 10 முக்கியத் தகவல்கள்:

1.இன்று மதியம் மத்திய பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை, ம.பி காங்கிரஸின் முக்கியப் புள்ளிகளான கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா, திக்விஜய சிங் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

Advertisement

2.ஆட்சியமைக்க ஆளுநரிடம் காங்கிரஸ் உரிமை கோரிய பின்னர், இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறும். அதில், யார் முதல்வராக ஆக்கப்பட வேண்டும் என்ற விவாதம் கிளம்பும் என்றும், அதில் அதிக வாக்குவாதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நமக்குக் கிடைத்த தகவல்படி, கமல்நாத், முதல்வராக ஆக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

3. கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு நடந்த ம.பி வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வந்தது.

Advertisement

4. மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ‘மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டோம்' என்று தெரிவித்துள்ளார். பாஜக-வும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் என்று கூறப்பட்டு வந்தது. அந்தத் தகவலை சவுகான் நிராகரித்துள்ளார்.

5. காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், அக்கட்சியும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அக்கட்சிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

Advertisement

6. மத்திய பிரதேசத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருக்கு இடையில் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி இறுதியாகவில்லை. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் கமல்நாத், மாயாவதியைத் தொடர்பு கொண்டு, ஆதரவு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. பகுஜன் சமாஜ், மத்திய பிரதேசத்தில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் 1 தொகுதியில் வெற்றி பெற்றது. இருவரும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

8. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக, காங்கிரஸை விட அதிக வாக்குகள் பெற்றன. பாஜக, 41 சதவிக வாக்குகள் பெற்ற நிலையில், காங்கிரஸ் 40.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன.

9. மண்ட்சூர் பகுதியில் பாஜக-வுக்குக் கடும் சரிவு ஏற்பட்டது. சென்ற ஆண்டு அங்கிருந்துதான் விவசாயிகள் போராட்டம் ஆரம்பமானது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ம.பி தேர்தல் பிரசாரத்தை அங்கிருந்து தான் ஆரம்பித்தார்.

Advertisement

10. பாஜக, கிராமப்புறப் பகுதிகளிலும், பட்டியலினத்தவர்கள் அதிகம் வாழும் பகுதியிலும் அதிக இடங்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement