This Article is From Aug 23, 2020

பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முன்னதாக உதயகுமாரின் மதுரை இரண்டாம் தலைநகர் கருத்தினை அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான செல்லூர் கே.ராஜூவும் ஆதரித்திருந்தார். மாநில அமைச்சர்களே தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் குறித்து பேசுவது பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் சமீப நாட்களாக இரண்டாவது தலைநகர் குறித்த கருத்துக்கள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றன. தமிழக அமைச்சர்களே இது குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக ஆகஸ்ட் 16 அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட குழு கூட்டத்தில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தீர்மானமாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், “முதல்வரும் துணை முதல்வரும் என்னை அழைத்து பதவி முக்கியமா? தென் தமிழக வளர்ச்சி முக்கியமா? என கேள்வியெழுப்பினால் எனக்கு தென் தமிழகத்தின் வளர்ச்சியே முக்கியமென கூறுவேன்” என்றும், எனவே மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

.