This Article is From Aug 23, 2018

“கொடுக்கவும் மறுக்கிறது, கிடைப்பதையும் தடுக்கிறது”- சாடும் கேரள அமைச்சர்

வெளிநாடுகளிடமிருந்து கேரள வெள்ளத்துக்கு நிதியுதவி வாங்குவது குறித்து கேரள அரசுக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடு வந்துள்ளது

New Delhi:

வெளிநாடுகளிடமிருந்து கேரள வெள்ளத்துக்கு நிதியுதவி வாங்குவது குறித்து கேரள அரசுக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடு வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது இருக்கும் சட்ட நடைமுறைகள்படி, நிவாரணங்களுக்கானத் தேவையை உள்நாட்டிலிருந்தே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று மாலை கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ‘நாங்கள் மத்திய அரசிடம் 2,200 கோடி ரூபாய நிதியுதவி கேட்கிறோம். அவர்கள் 600 கோடி ரூபாய் தருகிறார்கள். நாங்கள் எந்த நாட்டு அரசுக்கும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் எங்களுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி தருகிறது. ஆனால், அதை வேண்டாம் என்று சொல்கிறது மத்திய அரசு. மத்திய அரசு எங்களுக்கு போதிய நிதியையும் கொடுக்க மறுக்கிறது. கிடைக்கும் நிதி உதவியையும் தடுக்கிறது என்றார்.’ என்று கொதித்துள்ளார். மேலும், 2016 தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்திற்குக் கீழ் வெளிநாட்டு நிதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

o4hadavg

ஐக்கிய அரபு அமீரகம், 700 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ள நிலையில், கத்தார் 35 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாலத் தீவுகள் 35 லட்ச ரூபாய் தர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல தாய்லாந்து அரசு, கேரளாவுக்கு தர இருந்த நிதியுதவியையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டது மத்திய அரசு. இது குறித்து இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர், சுத்தின்டார்ன் சாம் கோங்சாக்டி, ‘கேரள வெள்ளத்துக்கு வெளிநாட்டு நிதியுதவிகளை பெறுவதில்லை என்று இந்திய அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது. எங்கள் எண்ணம் இந்திய மக்களுடன் இருக்கும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

f0d8s78g

இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து நிதியுதவியைப் பெறுவதற்குகுத் தடையாக இருக்கும் நடைமுறைகளை சரி செய்ய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

.