This Article is From Apr 14, 2020

ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது ஆபத்தானது; அன்புமணி ராமதாஸ்

ஏற்றுமதி வாய்ப்பு கொண்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும்; 16 வகையான கனரக ஆலைகள் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில்துறை கோரியிருக்கிறது. 

Advertisement
தமிழ்நாடு Edited by

ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது ஆபத்தானது; அன்புமணி ராமதாஸ்

Highlights

  • ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது ஆபத்தானது
  • இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3வது இடம்
  • 9 கோடி தொழிலாளர்கள் வெளியில் வந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்

ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது ஆபத்தானது என்றும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, 9,152 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. நேற்று வரை 2-ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில், 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகத்துக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள கடிதத்தை குறிப்பிட்டு பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; சீனாவின் பல பகுதிகளில் வைரஸ் பரவல் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

ஏற்றுமதி வாய்ப்பு கொண்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும்; 16 வகையான கனரக ஆலைகள் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில்துறை கோரியிருக்கிறது. 

இந்தியாவில் முதற்கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்டமாக முதலில் இரு வாரங்களுக்கும், பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கும், அதாவது மே மாத முதல் வாரம் வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் நாட்டில் மொத்தமுள்ள 736 மாவட்டங்களில் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட 300 மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் மே முதல் வாரத்திற்கு பிறகு ஊரடங்கை படிப்படியாக தளர்த்தலாம்.

Advertisement

அவ்வாறு செய்வதற்கு பதிலாக அவசரப்பட்டு 16 வகையான தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்தால், அதன் மூலம் எந்த அளவுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைக்குமோ, அதை விட 5 மடங்குக்கும் கூடுதலான பொருளாதார வீழ்ச்சி நோய்ப்பரவல் காரணமாக ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

ஊரடங்கிலிருந்து 9 கோடி தொழிலாளர்கள் வெளியில் வந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என அன்புமணி எச்சரித்துள்ளார். எனவே உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி, விநியோகம் தவிர மற்ற எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement