This Article is From Apr 03, 2019

‘நமோ டிவி’ ரிலீஸால் தேர்தல் விதிமுறைகளை மீறியதா பாஜக… வெடிக்கும் சர்ச்சை!

இந்திய அளவில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் உரிமம் வாங்கியுள்ள தனியார் தொலைக்காட்சிகளின் பட்டியலில் இந்த நமோ டிவி சேனல் இல்லை. 

‘நமோ டிவி’ ரிலீஸால் தேர்தல் விதிமுறைகளை மீறியதா பாஜக… வெடிக்கும் சர்ச்சை!

நமோ டிவி என்பது 24 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு சேனல். பிரதமர் மோடியின் பெயரும் படமும் இந்த சேனலின் லோகோவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

New Delhi:

நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக ‘நமோ டிவி' சேனலை ஆரம்பித்துள்ளது. இந்த டிவி சேனலில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மற்றும் பாஜக-வுக்குச் சம்பந்தமான காணொளிகள் மட்டுமே ஒளிபரப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சேனல் ஆரம்பித்துள்ளது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முக்கிய 10 தகவல்கள்:

1.நமோ டிவி என்பது 24 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு சேனல். பிரதமர் மோடியின் பெயரும் படமும் இந்த சேனலின் லோகோவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

2.இந்த சேனல் விவகாரம் குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. 

3.அனைத்து டிடிஎச் நிறுவனங்களும் இந்த சேனலை ஒளிபரப்பி வருகின்றன. இந்த சேனலுக்கு யார் உரிமையாளர் என்பது குறித்தோ யார் இதற்கு நிதி வழங்குகிறார் என்பது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. 

4.இந்திய அளவில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் உரிமம் வாங்கியுள்ள தனியார் தொலைக்காட்சிகளின் பட்டியலில் இந்த நமோ டிவி சேனல் இல்லை. 

5.இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி, தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னரும் இதைப் போன்று ஒரு கட்சிக்கு, டிவி சேனல் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்படலாமா. அனுமதி கொடுக்கப்படவில்லை என்றால், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

6.மற்ற கட்சிகளை விட பாஜக-வுக்கு இது கூடுதல் சாதகத்தைத் தருகிறது என்று ஆம் ஆத்மி குற்றம் சுமத்தியுள்ளது. 

7.'நமோ டிவி-யில் ஒளிபரப்பப்பட உள்ள நிகழ்ச்சியை யார் மேற்பார்வையிடுவர்' என்றும் கேள்வி எழுப்பியுள்ளது ஆம் ஆத்மி

8.காங்கிரஸ் தரப்பும் நமோ டிவி-யில் வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதம் எழுதியுள்ளது. 

9.நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 

10.அரசு நடத்தி வரும் தூர்தர்ஷன் சேனலிலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஒரு மணி நேரத்துக்கு ‘மெயின் பி சவுகிதார்' என்கின்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது குறித்தும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

.