This Article is From Nov 07, 2018

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு விருப்பமில்லை: வைகோ

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விருப்பமில்லாமலேயே இருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisement
தெற்கு Posted by

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விருப்பமில்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டது. அதுபோன்ற தமிழ்நாடு அமைச்சர் அவையும் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுநரின் மனிதாபிமான கடமையாகும்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர். அதனால் ஆளுநர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் இன்னொரு தரப்பினர் வழக்கு போட்டு உள்ளனர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டும் என்று நேரம் கொடுத்துள்ளனர். அதாவது நாம் காலம் காலமாக வந்து நாள் முழுக்க காலை முதல் மாலை வரை பட்டாசு வெடித்து வருகிறோம். சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் சில இடங்களில் பட்டாசு போட்டிருக்கலாம். அவர்களை எச்சரித்து இதுபோன்று செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு விட்டு இருக்கலாம். அதை விட்டுவிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வது தவறானது.

Advertisement

மத்திய அரசு தொடர்ந்து தமிழக பிரச்சனையில் தலையிட்டு வருகிறது. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா பிரச்சனைகளும் அனைத்தும் அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
 

Advertisement