காரணம் மனிதர்கள் தான் என்று பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
நகர்ப்புற சூழல்களில் புறாக்களுக்கு ஏன் கால்விரல்களை இழந்து விட்டன தெரியுமா…? அதற்கு காரணம் மனிதர்கள் தான் என்று பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனிதர்களின் முடிதான் புறாக்களின் கால் நகங்களை பழுதடையச் செய்து விரல்களையும் இழக்க வைத்துள்ளது.
நீண்டகாலமாக விஞ்ஞானிகள் நோய்த்தொற்று காரணமாகவோ அல்லது இரசாயன மாசுபாட்டினால் ஏற்பட்டிருக்கலான் என்றே எண்ணி வந்துள்ளனர்.
பிரான்ஸின் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் லியோன் பல்கலைக்கழகத்தின் குழு, பாரிஸில் உள்ள 46 இடங்களில் உள்ள புறாக்களிடமிருந்து கால் சிதைவு குறித்து பதிவுகளை மேற்கொள்ளத் தொடங்கியது. புறாக்கள் கால்விரல்கள் சிதைந்து போனதற்கு அனைத்து நிகழ்வுகளிலும் மனித மாசுபாடு ஒரு பங்கினை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. பறவைகளின் கால்களில் மனிதர்களின் முடிகள் சிக்கிக் கொள்வதால் அவை தனது கூர்மையான விரல் முனைகளை இழக்கின்றன.
நகர்ப்புறங்களில் கூடுதலாக மரங்கள் வளர்ப்பதன் மூலம் பறவைகளுக்கு மக்கள் சாதகமான வாழ்விடங்களை தரமுடியும் என்றும் அதுவே பறவைகளுக்கு பயனளிக்கும் என்று குழு பரிந்துரைத்தது.
இந்த ஆய்வு உயிரியல் பாதுகாப்பு இதழில் வெளியிடப்பட்டது.
Click for more
trending news