This Article is From Jul 18, 2020

“தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல் வாழும் சமூகம் தான் அறிவார்ந்த சமூகம்!”: கமல்ஹாசன்

தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி கவசம் குறித்து பல்வேறு கருத்துக்கள் மேலெழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
தமிழ்நாடு Written by

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனல் மீது பாஜக தரப்பில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வந்த விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Advertisement

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் “தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம்.” என டிவிட்டரில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி கவசம் குறித்து பல்வேறு கருத்துக்கள் மேலெழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement