This Article is From Mar 18, 2019

‘நானே வாதாடுகிறேன்!’- நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு ‘குற்றவாளி’ கொடுத்த ஷாக்

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

‘நானே வாதாடுகிறேன்!’- நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு ‘குற்றவாளி’ கொடுத்த ஷாக்

40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு 4 வயது குழந்தையின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. 

நியூசிலாந்தில் இருக்கும் இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், தனக்காக வாதாட இருந்த வழக்கறிஞரை நீக்கியுள்ளார். அவர், தானே வழக்கில் வாதாட உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், தன் மனதில் உள்ள அடிப்படைவாதத்தை அவர் சொல்ல ஏதுவாக நீதிமன்றம் அமைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. 

ப்ரென்டன் டர்ரன்ட் என்கின்ற 28 வயது ஆஸ்திரேலியர்தான், நியூசிலாந்து துப்பாக்கிச்சூடுக்குக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை ஒரு முறை மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, தன் தரப்பு வாதத்தை டர்ரன்டே எடுத்து வைப்பார் எனப்படுகிறது. 

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு 4 வயது குழந்தையின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. 

இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், ‘இந்த நாள் நியூசிலாந்து வரலாற்றில் மிகவும் மோசமான நாளாகும். இது தீவிரவாதத் தாக்குதல் எனத் தெளிவாக தெரிகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் 3 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஒருங்கிணைந்து எதிர்ப்போம். தீவிரவாதத்துக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நியூசிலாந்து தற்போது துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், டர்ரன்ட் முதன்முதலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்டு பீட்டர்ஸ், ‘அவரிடம் நான் பேசியதில் இருந்து ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்ல முடியும். அவர் மன ரீதியில் தெளிவாகவே யோசிக்கிறார். சில அடிப்படைவாதத்தைத் தவிர அவரிடம் நான் எந்தக் குறையையும் பார்க்கவில்லை. 

தற்போது, அவர் தன்னைத் தானே நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம், தன் மனதில் உள்ள அடிப்படை வாதத்தை முன் வைக்க ஒரு களமாக அதைப் பயன்படுத்திக் கொள்வார் என்று சந்தேகப்படுகிறேன்' என்று அச்சம் தெரிவித்தார். 

முன்னதாக டர்ரன்ட், இந்தத் தாக்குதல் குறித்து விட்டுச் சென்ற 74 பக்கம் கொண்ட குறிப்பில், ‘ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வரும் மக்கள் தொகையை நான் குறைக்க விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெள்ளை இனத்தவரின் புதிய அடையாளமாக இருக்கிறார்' என்று தெரிவித்திருந்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.