டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் 17 இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
New Delhi: தற்கொலைத் தாக்குதலுக்கு வழிநடத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும், தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டம் தீட்டினார்கள் என்றும் தேசிய புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், இவர்களை 12 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் 17 இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லான்சர், 100 அலாரம் கொண்ட கடிகாரங்கள். கைத்துப்பாக்கிகள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்களில் ஐந்து பேர் டெல்லியிலும், மீதமுள்ளவர்கள் உத்தர பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர். இதுவரை நடந்த விசாரணையில் முகமது சோஹைல் என்பவர் தான் இந்த அணியை வழிநடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. ஆயுதங்கள் வாங்குவது, வெடிகுண்டு தயாரிப்பது போன்ற விஷயங்களை இவர்தான் அந்த குழுவுக்கு பிரித்து வழங்கியுள்ளார்.
இவர்களிடமிருந்து 100 செல்போன்கள் மற்றும் 135 சிம்கார்டுகளை கைப்பற்றியதாகவும். இதனைப் பயன்படுத்தி அதிகப்படியான டேட்டாக்களை என்க்ரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் மூலம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோஹைல், முப்பது வயதுக்குட்பட்டவர் என்றும், நடுத்தர வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் 12 கைத்துப்பாக்கிகளும், 150 ரவுண்ட் அமோனியம் கைப்பற்றப்பட்டது. இந்தக் குழுவை யூ-ட்யூபில் ஆயுதம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு குறித்த விவரங்களை தேடியதைக் கொண்டு கைதுசெய்யப்பட்டனர்.