This Article is From Jan 01, 2019

‘பணமதிப்பிழப்பு திடீரென்று அறிவிக்கப்பட்டதா..?’- பிரதமர் மோடி புதிய விளக்கம்

பணமதிப்பிழப்பின் அறிவிப்பின் மூலம் புழக்கத்திலிருந்த 80 சதவிகிதம் ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆகின

‘பணமதிப்பிழப்பு திடீரென்று அறிவிக்கப்பட்டதா..?’- பிரதமர் மோடி புதிய விளக்கம்

2016 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி

New Delhi:

2016 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறிவிப்பு மக்களுக்கு ஷாக் கொடுத்ததாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதை மறுத்துள்ளார். 

இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நாங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் செய்வதற்கு ஓராண்டு முன்னரே, யாராவது கருப்புப் பணம் வைத்திருந்தால் அதை இப்போதே முறையாக ஒப்படைத்து விடுங்கள், விளைவுகளிலிருந்து தப்பிப்பீர்கள் என்று அறிவித்தோம். 

கருப்புப் பணத்தைப் பதுக்கியிருந்த பலர், மோடியும் மற்றவர்கள் போல சொன்னதைச் செய்யமாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால், நடந்தது வேறு' என்று விளக்கம் அளித்துள்ளார். 

பணமதிப்பிழப்பின் அறிவிப்பின் மூலம் புழக்கத்திலிருந்த 80 சதவிகிதம் ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆகின. கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு சார்பில் கூறப்பட்டது.

.