This Article is From Feb 24, 2020

தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்- முதல்வர் சாடல்.

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் என்பது, ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்

Advertisement
தமிழ்நாடு Posted by

2011 பிப்ரவரியில் ஆட்சியிலிருந்த தி.மு.கதான் தமிழகத்தில் என்.பி.ஆர்-ஐ தொடங்கி வைத்தது

கோவை: அரசு விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வரும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினத்தினையொட்டி பல அரசுத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களாகப் பெரு நகரங்களில் சென்னையும், மாநகரங்களில் கோவையும் உள்ளதாகத் தெரிவித்தார். என்.பி.ஆர் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து, என்.பி.ஆர் குறித்து ஏற்கெனவே தெளிவுப்படுத்தியாகிவிட்டதாகவும். ஆனால், எதிர்க்கட்சியினர் என்.பி.ஆர் குறித்து இஸ்லாமிய மக்களிடையே தேவியற்ற அச்சத்தினை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2011 பிப்ரவரியில் ஆட்சியிலிருந்த தி.மு.கதான் தமிழகத்தில் என்.பி.ஆர்-ஐ தொடங்கி வைத்தது என்றும். என்.பி.ஆர் குறித்து தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.

Advertisement

மேலும், எதிரக்கட்சியினர் தற்போதைய நிலையில் தமிழக அரசு அதிக கடன் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்களே என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க வாங்கிய கடனுக்கு தற்போதும் வட்டி கட்டிக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் ஆட்சியிலிருந்து இறங்கும்போது சுமார் 1 லட்சம் கோடியினை கடனாக வைத்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி என்பது மிகப்பெரியத் தொகை.

ஆனால், இன்று அவர்கள் அ.இ.அ.தி.மு.க அரசினை விமர்சிக்கின்றார்கள். மேலும், ஊடகங்கள் குறித்தும், குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்தும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை ஆர்.எஸ் பாரதி பயன்படுத்தினார். என்றும் பதிலளித்தார். 

Advertisement

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் என்பது, ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

Advertisement