This Article is From Feb 11, 2020

பீடத்தில் தாமரையை வைக்காமல் விளக்கமாரை வைத்துவிட்டனர் டெல்லி மக்கள்: இல.கணேசன்

ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என சொல்ல முடியாது.

Advertisement
இந்தியா Edited by

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜக பெற்றுள்ளது - இல.கணேசன்

ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல் டெல்லி மக்கள் விளக்கமாரை வைத்துவிட்டனர் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில், பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் கடும் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 8 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. 

ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பீடத்தில் தாமரையை வைக்காமல் டெல்லி மக்கள், விளக்குமாறை வைத்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என சொல்ல முடியாது.

Advertisement

கடந்த தேர்தலோடு ஒப்பிட்டுதான் இதனை பேச வேண்டும்.கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜக பெற்றுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் அள்ளி அள்ளி இலவசங்களை கொடுத்துள்ளனர். ஆட்சி பீடத்தை ராஜ்ய லஷ்மி என்பார்கள். அந்த பீடத்தில் தாமரையை வைக்காமல் டெல்லி மக்கள் விளக்குமாறை வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

Advertisement