This Article is From Nov 10, 2018

புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 தினங்களில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

நேற்று தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடி வாரத்தில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவிவருகிறது. இது அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது.

இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 13ஆம் தேதி வரை அந்தமான் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை, மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிவருகிறது. இதன் கரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

.