ரீட்டாவின் ட்வீட் 41,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது.
பெண் விஞ்ஞானி ஒருவர் நாசாவில் உரையாற்றுவதற்கு பிரகாசமான தங்க நிற உடை அணிந்து பேசினார். அப்பெண் விஞ்ஞானியின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. மான்ஹேட்டனில் உள்ள ஒரு இணை இயக்குநரான ரீட்டா ஜே. கிங் பிரகாசமான ஆடை அணிந்ததற்கான காரணத்தை ட்வீட் செய்திருந்தார்.
2011 ஆம் ஆண்டில் நாசாவில் மாணவர்களுடன் உரையாடச் சென்றிருந்தபோது பிரகாசமான தங்க நிற ஆடையை அணிந்திருந்தார். “என்னுடைய ஆடைகளிலையே தேடி எடுத்து இந்த ஆடையை அணிந்தேன். ஏனென்றால், இதற்கு முன்பு பள்ளிக்கு பேச சென்றிருந்த போது சிறுமி எழுதிய கடிதத்தில் பிரகாசமான உடையை அணியலாமே... விஞ்ஞானிகள் பிரகாசமானவர்கள் தானே இருக்க முடியும்”என்று எழுதியிருந்ததாக தெரிவித்தார்.
.
ரீட்டாவின் ட்வீட் 41,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. ஆன்லைனில் பலரும் இதை ஆதரித்துள்ளனர். ஆணாதிக்கம் செலுத்தும் துறைகளி அவருடைய பெண்மை தன்மையை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
Click for more
trending news