நிகழ்ச்சி ஒன்றில் கம்மல் அணிந்த ஆண் நடிகரின் மறைக்கப்பட்ட காது
கடந்த சில நாட்களாக சீனாவில் #MaleTVStarsCantWearEarrings என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது.
நம் நாட்டில், அமேசான் ப்ரைம், நெட் ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களை போன்று சீனாவில் iQiyi தளம் உள்ளது. இதில் வரும் நிகழ்ச்சிகளில் கம்மல்கள் அணிந்து நடிக்கும் ஆண் நடிகர்களில் காது மறைக்கப்படுகிறது. இதனால் தான் #MaleTVStarsCantWearEarrings என்பது ட்ரெண்டிங் ஆகியது.
சீனாவில், பெரும்பாலானவை அரசுக்கு சொந்தமானது ஆகும். இதில் தொலைக்காட்சி சேனல்களும் அடங்கும். அதில் வரும் நிகழ்ச்சிகள் சென்சார் செய்த பின்னரே ஒளிப்பரப்பு செய்யப்படும்.
காது மறைக்கப்பட்ட சீனா ஆண் நடிகர்
சீனாவில் ஹிப்ஹாப் ரகங்கள், பச்சை குத்துவது, LGBT தொடர்புடைய வாக்கியங்கள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘இது பாலின வேறுபாடு. இதனை கடுமையாக எதிர்க்கிறோம்' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர், ‘நாங்கள் என்ன அணிவது என்பது வரை அரசு தான் தீர்மானிக்கணுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்மல் அணிந்த ஆண்களை தொலைக்காட்சியில் காட்டுவதற்குமா சீன அரசு தடை விதிக்கிறது என்று வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது
Click for more
trending news