Read in English
This Article is From Nov 01, 2018

‘இணைந்து பணி செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்!’- ஆர்பிஐ ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ்

ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ், நாட்டின் நலன் கருதி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது மத்திய அரசு

Advertisement
இந்தியா

இந்த விவகாரம் குறித்து நேற்று விளக்கம் அளித்தது நிதி அமைச்சகம்

Highlights

  • ஆர்பிஐ - அரசுக்கு இடையில் மோதல் வெளிச்சத்து வந்துள்ளது
  • ஆர்பிஐ சுதந்திரத்தைப் பறித்தால் விளவுகள் மோசமாக இருக்கும், துணை ஆளுநர்
  • ஆர்பிஐ நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது
New Delhi:

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மத்திய அரசுடன் இணைந்து பணி செய்ய வேண்டும், இல்லையென்றால் பதவி விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு தலைவர் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ், நாட்டின் நலன் கருதி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்த நடைமுறை முன்னெப்போதும் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை தி எகனாமிக் டைம்ஸ் செய்தித் தாள் வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பான செய்தியில், சில வாரங்களாக கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு கடிதங்களை அனுப்பியுள்ளது. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்த பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் உர்ஜித் படேல், ஆர்பிஐ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 

இந்த விவகாரம் குறித்து நேற்று விளக்கம் அளித்த நிதி அமைச்சகம், ‘பொது நலன் கருதி பல்வேறு சமயங்களில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்துரையாடியுள்ளது. இது குறித்து நடக்கும் விவாதங்கள் பற்றி மத்திய அரசு வெளிப்படையாக தெரிவித்ததில்லை. விவாதங்களின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மட்டுமே பொதுத் தளத்தில் தெரிவிக்கப்படும்' என்று கூறியது.

Advertisement

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு தலைவர் அஷ்வனி மகாஜன், ‘அர்பிஐ, மத்திய அரசுடன் இணக்கமாக மட்டுமே செயல்பட வேண்டும். அப்படி செயல்பட முடியவில்லை என்றால் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் உர்ஜித் படேல் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்.

அதேபோல ஆர்பிஐ அமைப்பில், தொடர்ந்து வெளிநாட்டில் பயின்ற பொருளாதார வல்லுநர்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி செய்ய வேண்டிய அவசியமே அல்ல. நம் நாட்டில் பயின்ற தேச பக்தி கொண்ட பல பொருளாதார வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதவி வழங்கப்பட வேண்டும். பல விஷயங்களில் நாட்டின் நடைமுறை தெரியாமல் ஆர்பிஐ அடம்பிடிக்கிறது. இதனால், நமது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்ற வாரம் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர், வைரல் ஆச்சார்யா, ‘ஆர்பிஐ-யின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் செயல்பட்டால் அது பெரும் விளைவுகளை கொடுக்க நேரிடும்' என்று எச்சரித்தார். இதையடுத்து தான் ஆர்பிஐ அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் இருப்பது தெரிய வந்தது. 

Advertisement