This Article is From Dec 28, 2018

‘மன்மோகன் குறித்த பயோ-பிக் படத்துக்குத் தடையா..?’- காங்., கொடுத்த சுருக் பதில்

இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது

‘மன்மோகன் குறித்த பயோ-பிக் படத்துக்குத் தடையா..?’- காங்., கொடுத்த சுருக் பதில்

முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

New Delhi:

முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. நேற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி தேசிய பேசு பொருளாக மாறியுள்ளது. 

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்துக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து இது குறித்து தெரிவிக்கையில், ‘மன்மோகன் குறித்து எடுத்துள்ளதாக சொல்லப்படும் அந்தப் படம் குறித்து நாங்கள் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதற்கு எதிராக போராடி தேவையில்லாத கவனத்தை பெற்றுத் தர விரும்பவில்லை. பாஜக வேண்டுமென்றே, நாங்கள் ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில், படத்தைத் தடை செய்யப் போவதாக வதந்தி பரப்பி வருகிறது. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் தம்பே படேல், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘படம் வெளி வரும் முன்னர் எங்களுக்கு ஒரு முறை போட்டுக் காட்ட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், டிரெய்லரை பகிர்ந்து, ‘ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள். டாக்டர்.மன்மோகன் சிங் ஒரு பகடைகாயாக பயன்படுத்தப்பட்டாரா. காங்கிரஸ் கட்சியின் உள்ளேயிருந்த கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்ததின் டிரெய்லரைப் பாருங்கள். வரும் ஜனவரி 11 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது' என்று பதவிட்டுள்ளது. 

.