বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 13, 2019

சிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு! - பரபர பின்னணி

Maharashtra Government Formation: காங்கிரஸ், சிவசேனாவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பது போல ஒரு பதிலைச் சொல்லிவிட்டது.

Advertisement
இந்தியா Edited by

தேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன.

New Delhi:

மகாராஷ்டிரத்தின் (Maharashtra) ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல் செய்ய பரிந்துரை செய்ததனின் பேரில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து சிவசேனா, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள், இம்முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மாலைவாக்கில், சிவசேனா, எப்படியும் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அரியணையில் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அதற்குக் காரணமாக அமைந்தது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி - தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இடையிலான ஒரு போன் அழைப்புதான் என்று சொல்லப்படுகிறது. 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன. தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவைக் கோரியது.

வரலாற்றில் முதன்முறையாக எதிர் துருவ கொள்கைகள் கொண்ட சிவசேனாவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் நீட்சியாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி, ஆதரவு கோரினார். சோனியாவோ, நான் கட்சி பிரமுகர்களுடன் கலந்தோலிசித்து விட்டு மீண்டும் அழைக்கிறேன் என்று முடித்துக் கொண்டார். 

Shiv Sena தலைவர், Uddhav Thackeray, Sonia Gandhi-ஐ போன் மூலம் அழைத்து, ஆதரவு கோரினார் (File Photo)

இதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னர், ‘சிவசேனாவுக்கு ஆதரவு கிடையவே கிடையாது,' என்று உறுதியாக இருந்த சோனியா, ஒரு கட்டத்தில், ‘ஆதரவு கொடுக்கலாம்' என்ற நிலைப்பாட்டுக்கு வந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் மாநிலத்தில் தனது கூட்டாளியான தேசியவாத காங்கிரஸின் சரத் பவாரைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டுள்ளார் சோனியா.

Advertisement

பவார், முதலில் இருந்தே சிவசேனா பக்கம் சாய தாயாராக இருந்தபோதும், ‘காங்கிரஸ் ஒப்புக் கொண்டால்தான் நாங்கள் வருவோம்' என்று கறார் காட்டினார். இப்படிபட்ட சூழலில் பவாருடன் பேசிய சோனியாவுக்கு குழப்பமான பதிலே கிடைத்தது. “சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தாலும், அவர்களுடன் நாம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. பல விஷயங்களில் இன்னும் தெளிவு பெற வேண்டும்,” என்று சொல்லியிருக்கிறார். மேலும், “இந்துத்துவ வலதுசாரி சித்தாந்தம் கொண்ட சிவசேனாவுடன் காங்கிரஸ் செல்வது சரியாக இருக்குமா?,” என்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

அனைத்தையும் கேட்டுக் கொண்ட சோனியாவும் காங்கிரஸும், சிவசேனாவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பது போல ஒரு பதிலைச் சொல்லிவிட்டது. இந்த பதிலைத் தொடர்ந்துதான், மாநிலத்தில் அரசியல் குழப்பம் மேலும் அதிகரித்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல் செய்யப்பட்டது. 
 

Advertisement
Advertisement