This Article is From Jan 01, 2019

கர்நாடகாவில் காங்., - மஜத இடையில் தொகுதி பங்கீடு ஃபார்முலா: சீக்ரெட் பின்னணி!

சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை

கர்நாடகாவில் காங்., - மஜத இடையில் தொகுதி பங்கீடு ஃபார்முலா: சீக்ரெட் பின்னணி!

பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் - மஜத கட்சிகள், கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 

Bengaluru:

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி இடையில், வரப் போகும் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பரபர தகவல்கள் கிடைத்துள்ளன.

தொகுதி பங்கீடு குறித்து நம்மிடம் பேசிய மஜத மூத்த நிர்வாகி டேனிஷ் அலி, ‘சீட் பங்கீடு என்னவாக இருந்தாலும், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளி போக வேண்டும் என்பது மட்டும் உறுதி' என்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, தனிப் பெரும் கட்சியாக வந்து, ஆட்சியமைக்க உரிமை கோரியது. சில நாட்கள் எடியூரப்பா தலைமையில் பாஜக, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது. பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் - மஜத கட்சிகள், கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மேலும் பேசிய அலி, ‘மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 28 தொகுதிகளில் 18 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். 10-ல் மஜத நிற்க வேண்டும்' என்றார். கர்நாடகாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், மஜத-வுடன் கூட்டணியில் இருக்கிறது. அந்தக் கட்சிக்குத் தொகுதி ஒதுக்குவது பற்றி அலி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக காங்கிரஸுக்கும் மஜத-வுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் டேனிஷ் அலி, இப்படிப்பட்ட கருத்தை முன் மொழிந்துள்ளார். காங்கிரஸ் மொத்தம் இருக்கும் 28 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, ‘காங்கிரஸுக்கும் மஜத-வுக்கும் இடையில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதில் எந்த வித குழப்பமும் இருக்காது. நாங்கள் அது குறித்து உட்கார்ந்து பேசி சுமூக முடிவெடுப்போம். தொகுதி பங்கீடு குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.

.