Read in English
This Article is From Aug 13, 2020

ஆஸ்திரேலியாவின் தலைகீழ் நீர்வீழ்ச்சி.. இயற்கையின் அதிசய வீடியோ!

கடலில் இருந்து வரும் பலத்தக் காற்று மலையின் கீழ்ப்பகுதியில் மோதி, அதே வேகத்தில் மேலெழுகிறது.

Advertisement
விசித்திரம் Posted by

இங்குள்ள காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கி.மீ ஆகும்

ஆஸ்திரேலியாவில் மலைக்குன்றிலிருந்து விழும் அருவி மேல்நோக்கி செல்லும் அற்புத காட்சி கேமராவில் சிக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்டினிக்கு அருகில் உள்ள ராயல் தேசிய பூங்காவானது இயற்கையின் மடியில் வீற்றிருக்கிறது. இங்குள்ள பசுமையான மரங்களும், இதமான தென்றலும், பறவைகள், பூச்சிகளின் சப்தமும் வேறு ஒரு உலகிற்கு நம்மை எடுத்துச் செல்லும். 

இவ்வாறு இயற்கையின் அற்புதங்களில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த அருவி புவியீர்ப்புக்கு மாறாக, மேல்நோக்கி பாய்கிறது. மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதீத வேகத்துடன் மேலெழும்புவதால், நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. 

இங்குள்ள காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கி.மீ ஆகும். இவ்வளவு வேகத்தில் காற்று அடிக்கும் போது நீர்வீழ்ச்சியின் அருகில் யாரும் செல்ல முடியாது. இது தொடர்பாகஎஸ்குவேர் என்ற செய்திநிறுவனம் பிரத்யேக கட்டுரை எழுதியுள்ளது. 

அதில் வானிலை ஆய்வாளர் கூறுகையில், மலைக்கு அருகில் பெருங்கடல் உள்ளது. இந்தக் கடலில் இருந்து வரும் பலத்தக் காற்று மலையின் கீழ்ப்பகுதியில் மோதி, அதே வேகத்தில் மேலெழுகிறது. இவ்வாறு எழும் போது, காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், நீர்வீழச்சியும் மேல் நோக்கி பாய்கிறது. 

 

புண்டீனா  நகரம் மற்றும் அதற்கு அருகில் உள்ள நகரங்களும் லேசான வெள்ளப்பாதிப்பால் சேதமாகியுள்ளன. மேலும், மோசமான வானிலை காரணமாக படகு சேவைககள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement