This Article is From Dec 23, 2019

CAA-வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி.

Advertisement
தமிழ்நாடு Edited by

சென்னையில் நடைபெற்றது ’பேரணி அல்ல: போர் அணி - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ப.சிதம்பரம், வீரமணி, கனிமொழி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றுது. இதற்காக அங்கு சுமார் 10,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 

இதனை தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கூட்டாக பங்கேற்றனர். அப்போது குடியுரிமை சட்ட திருத்த‌த்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி தலைவர்கள் முழக்கம் எழுப்பினர். 

Advertisement

இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் தொடரும். சென்னையில் நடைபெற்றது 'பேரணி அல்ல: போர் அணி'.

சென்னையில் நடந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி.

இந்த போராட்டத்தில் ஏறக்குறைய 10,000க்கும் மேலான காவல்துறையினரும் பங்கேற்று தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.  

Advertisement
Advertisement