இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணியிக்கும் 17வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் 8039 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 70% வரை வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் தமிழகம், மேற்குவங்கம், கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை காண நாடே எதிர்பாத்துக்கொண்டிருக்கிறது. இவ்வேளையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் 'நம் கையில் மாநில அரசு நாம் காட்டுவதே மத்திய அரசு' என்று மலர்களால் அலங்கரிக்கப்படட வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வாசகம் தற்போது வைரலாகி வருகிறது