This Article is From Nov 01, 2018

கார்த்தி சிதம்பரத்தின் அவசர மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சூழல் இருக்கிறது

கார்த்தி சிதம்பரத்தின் அவசர மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்..!

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

New Delhi:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. இந்நிலையில், அவர் வெளிநாட்டுக்கு அவசரமாக பயணம் செய்யத் தேவை இருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம், ‘இது குறித்து இப்போது விசாரிக்கப்படாது' என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நடந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகித்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, தவறுதலாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிபிஐ, இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத் துறை, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கால் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் கார்த்தி. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்குக் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகள் அனைவருக்கும் அதிக பணிச் சுமை இருக்கிறது. இந்த மனு அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறிவிட்டார்.

.