This Article is From Jul 09, 2019

கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து கோவா செல்ல திட்டம்!

பாஜகவின் குதிரை பேரத்தை கண்டித்து மும்பையில் உள்ள சொகுசு விடுதி முன்பு காங்கிரஸ் இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து கோவா செல்ல திட்டம்!

அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை சோஃபிடெல் நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

Mumbai:

மும்பையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ள கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் கோவாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா விடுத்துள்ளனர். கடந்த 6ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 பேர் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, ஆட்சியை காப்பாற்றும் கடைசி முயற்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த, தற்போதைய மாநில அமைச்சர்களை ராஜினாமா செய்ய தயாராகுமாறு வலியுறுத்தப்பட்டது.

2c1ua8mg

இதையடுத்து, காங்கிரஸ் - மஜத கூட்டணியை சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்து அதற்கான கடிதத்தை முதல்வர் குமாரசாமியிடம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இரு கட்சிகளின் அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தனர்.

ஏற்கனவே ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.ஏக்களின் கடிதங்கள் மீது சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று முடிவு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்து பெங்களூரு கொண்டு வருவதற்கான முயற்சியை இரு கட்சி தலைவர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே சமயத்தில் பதவியை ராஜினாமா செய்துள்ள 13 எம்எல்ஏக்களை மனம் மாற்றி தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் புனே நகருக்கு இடம்பெயர்ந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதன்பின் கோவாவுக்கு சென்று விடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.