This Article is From Dec 12, 2019

2019 ஆம் ஆண்டில் இந்தியர்கள் கூகுள் செய்து பார்த்த டாப் 10 வார்த்தைகள் இதுதான்..!

2019 ஆம் ஆண்டில் அதிக தேடப்பட்ட சொற்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க…

2019 ஆம் ஆண்டில் இந்தியர்கள் கூகுள் செய்து பார்த்த டாப் 10 வார்த்தைகள் இதுதான்..!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது விரிவு இந்த ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது

இந்தியாவின் 2019-ஆம் ஆண்டில் அதிக தேடப்பட்டது ‘கிரிக்கெட் உலகக்கோப்பை' தான் கூகுள் தெரிவித்துள்ளது.  மிகப்பெரிய சர்ச் இன்ஞ்சினான கூகுள் 2019ல் அதிக தேடபட்ட தேடலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட் முதலிடத்தை பிடித்துள்ளது. உலககோப்பையில் இந்தியா நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

2019 ஆம் ஆண்டில் அதிக தேடப்பட்ட சொற்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க… 

1. கிரிக்கெட் உலகக் கோப்பை:

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கக்கூடியது. 2019 ஆம் ஆண்டில் அதிக தேடப்பட்ட வார்த்தை. 

2. மக்களவைத் தேர்தல்கள் 

2019 மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே வரை நடைபெற்றது. 

3. சந்திராயன் 2 

இந்தியா சந்திரன் குறித்த ஆய்வு பணிக்காக ஏவப்பட்ட செயற்கைகோள். விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2 அன்று சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது. சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு முன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்தது. 

4. கபீர் சிங் 

ஷாஹித் கபூர் மற்றும் கியாரா அத்வானி நடித்த படம் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.  

5. அவென்ஜர்ஸ் : எண்ட்கேம்

பாலிவுட் மட்டுமல்ல; ஹாலிவுட் திரைப்படங்களும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மார்வெலின் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் ஐந்தவதாக கூகுள் தேடப்பட்டுள்ளது. 

6. ஆர்ட்டிகிள் 370

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது விரிவு இந்த ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது.  

7. நீட் தேர்வு முடிவுகள் 

ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தினை வழங்கும் 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது. 

8. ஜோக்கர்

மற்றொரு  ஹாலிவுட் படம் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிகம் தேடப்பட்ட சொற்களின் பட்டியலில் இடம் பிடித்தது.

 9. கேப்டன் மார்வெல்

இந்த பட்டியலில் ஒன்பதாவது பட்டியலில் மார்வெல் சினிமா இடத்தை பெற்றுள்ளது. 

10. பி.எம். கிசான் யோஜனா:

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 10வது இடத்தில் பிரதமர் கிசான் யோஜனா திட்டம்.

Click for more trending news


.