Read in English
This Article is From Mar 13, 2019

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ட்ராஸ்டேக் சேலன்ஞ்

#trashtag ஹேஸ்டேக் மூலமாக ஆக்கபூர்வமான சேலன்ஞ் ஒன்றை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் (c) 2019 The Washington Post

2015 முதல் இந்த ஹேஸ்டேக் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் டீன் ஏஜ் இளைஞர்களுக்கு விதவிதமான 'சாவல்கள்'உருவாகிக் கொண்டே இருக்கும். தைரியத்தைக் காட்டுவதாக கூறி பல முட்டாள்தனமான செயல்கள் செய்வதை பார்க்கலாம். சில வைரல் வீடியோ காட்சிகளில் துணி அலச உதவும் திரவத்தை குடிப்பதை காண்டமை மூக்குத் துடைக்கப் பயன்படுத்துவது. என்று செய்வதைப் பார்த்திருக்கலாம்.

 இன்னும் சில சவால்கள் வாந்தியெடுக்காமல் ஒரு கேலன் பாலை குடிப்பது, ஒரு டேபிள் ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை சாப்பிடுவது, 2 லிட்டர் குளிர்பானத்தைக் குடிப்பது என முட்டாள்தனமான சவால்களையும் பார்க்கலாம். ஆல்கஹாலை விரலில் தேய்த்துவிட்டு நெருப்பு வைத்துக் கொள்வது. கொதிக்கும் தண்ணீருக்குள் பொருட்களை தூக்கி எறிவது என ஆபத்தான சவால்களும் வந்திருக்கின்றன.  

ஆனால் இந்தக் கதைகள் ஏதும் இங்கு இல்லை. #trashtag ஹேஸ்டேக் மூலமாக ஆக்கபூர்வமான சேலன்ஞ் ஒன்றை ஊக்கப்படுத்தி வருகின்றனர். சியாட்டலில் உள்ள வெளிப்புற லைட்டிங்க் நிறுவனம் ஒன்று டீன் ஏஜ் இளைஞர்கள் புதுவிதமான சவாலை கொடுத்துள்ளது. 

 
 

வீட்டின் அருகாமையில் உள்ள இடங்களில் குப்பையாக இருந்தால் அதை ஒரு போட்டோ எடுத்தும் அதன் பின் அதை சுத்தம் செய்தபின் ஒருமுறை போட்டோ எடுத்து முன்பு பின்பு என்று போட்டோவை வெளியிடும் சவாலை விடுத்துள்ளது.

Advertisement

2015 முதல் இந்த ஹேஸ்டேக் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இதில் பைரன் ரோமன் என்பவர் வெளியிட்ட புகைப்படம் பரவலான அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வாஷிங்க்டன் போஸ்ட் ரோமனை சந்தித்தபின் மீண்டும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இந்தப் புகைப்படம் 3,23,000 முறை ஷேர் செய்யப்பட்டது. பலர் இது சிறந்த யோசனை! இளைஞர்களே களமிறங்குகள் என்று எழுதியிருந்தார். மற்றொருவர் “இது இளைஞர்களுக்கு மட்டுமானதல்ல” என்று கமெண்ட் செய்திருந்தார். ரோமன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதை அனுப்பி சுத்தம் செய்வதை வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

வாஸிங்டன் போஸ்ட் நேர்காணலில் “நம்முடைய பூமியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு, யார் அசுத்தமாக்கியிருந்தாலும் அனைவராலும் அது சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். என்னுடைய ஒரு பதிவு உலகமெங்கும் சென்று அடைந்தததில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement