Read in English
This Article is From Dec 28, 2018

‘மன்மோகன் சிங்’ குறித்த திரைப்படம்: காங்கிரஸ், பாஜக ரியாக்ஷன்ஸ்!

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது

Advertisement
இந்தியா

2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Highlights

  • காங்கிரஸ், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • பாஜக, டிரெய்லருக்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளது
  • சஞ்சயா பாருவின் புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
New Delhi:

முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக-வினர் டிரெய்லர் குறித்து பொங்கி தள்ளியிருக்கிறார்கள். 

மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் தம்பே படேல், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘படம் வெளி வரும் முன்னர் எங்களுக்கு ஒரு முறை போட்டுக் காட்ட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 

அவர் மேலும், ‘படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது, உண்மை சம்பவங்களுக்கு மாறான கருத்துகள் சொல்லப்பட்டிருப்பது போல தெரிகிறது. காங்கிரஸ் கட்சியையும் அதன் முக்கிய நிர்வாகிகளையும் தரக் குறைவாக காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எனவே, உண்மைக்குப் புறம்பான காட்சிகள் படத்தில் இருக்கும் பட்சத்தில், அது நீக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், வேறு மாதிரியான விளைவுகளை படம் சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளார். 
 

அதே நேரத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், டிரெய்லரை பகிர்ந்து, ‘ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள். டாக்டர்.மன்மோகன் சிங் ஒரு பகடைகாயாக பயன்படுத்தப்பட்டாரா. காங்கிரஸ் கட்சியின் உள்ளேயிருந்த கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்ததின் டிரெய்லரைப் பாருங்கள். வரும் ஜனவரி 11 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது' என்று பதவிட்டுள்ளது. 

Advertisement

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement