This Article is From Apr 02, 2020

ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம்: தொலைபேசி வாயிலாக முதல்வர் விழிப்புணர்வு

தொலைபேசி மூலமாக எடப்பாடி பழனிசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம்: தொலைபேசி வாயிலாக முதல்வர் விழிப்புணர்வு

ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம்: தொலைபேசி வாயிலாக முதல்வர் விழிப்புணர்வு

ஹைலைட்ஸ்

  • அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்: எடப்பாடி வேண்டுகோள்
  • ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம்
  • தொலைபேசி வாயிலாக முதல்வர் விழிப்புணர்வு

அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி ஆடியோ வாயிலாக தமிழக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 57 ஆக அதிகரித்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத் மத மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 616 பேரை கண்டறிவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதம் உள்ள 616 பேரும் தாங்களாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மீண்டும் மீண்டும் மக்களை அறிவுறுத்தி வருகிறார். Airtel, BSNL, JIO ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக எடப்பாடி பழனிசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

அந்த ஆடியோவில் முதல்வர் கூறுவதாவது, வணக்கம் உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன். உலகம் எங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம். 

உங்கள் நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனவே இந்த நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே இருங்கள் நன்றி வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

.