This Article is From Jul 05, 2019

''வருமான வரி விலக்கு குறித்து பட்ஜெட்டில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை'' : வசந்த குமார் எம்.பி.

குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

ஏழை எளிய மக்களை மத்திய பட்ஜெட் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

ரூ. 5 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு வரி விலக்கு உண்டா? இல்லையா? என்று மத்திய பட்ஜெட் குறித்து எச். வசந்த குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தை சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி பேசி பட்ஜெட் அறிக்கையை தாக்கல செய்துள்ளார். பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், இணைப்பு அட்டவணைகளை பார்தது தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மொத்தத்தில் இது குழப்பமான பட்ஜெட். 

கங்கை நதி தூய்மை திட்டத்திற்காக பாஜக அரசினால் ரூ. 80 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அத்திட்டம் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றி கூறப்படவில்லை. 

ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று கூறியவர், ரூ. 5 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு முதல் 5 லட்சத்திற்கு வரி விலக்கு உண்டா அல்லது ஏற்கனவே உள்ள முதல் ரூ. 2.5 லட்சத்திற்கு மட்டும்தான் வரி விலக்கு உண்டா என்பது தெளிவாக கூறப்படவில்லை. 

Advertisement

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் பற்றி எதுவும் பட்ஜெட் உரையில் கூறப்படவில்லை. 

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்துவிடுவோம் என்று அறைகூவல் விடுத்த பாஜக அரசு இந்த பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் கூறாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. 

Advertisement

இவ்வாறு வசந்த குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement