This Article is From Feb 20, 2019

அதிமுக-பாமக இடையே கட்டாய கல்யாணம் கிடையாது: ராஜேந்திர பாலாஜி

அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன

அதிமுக-பாமக இடையே கட்டாய கல்யாணம் கிடையாது: ராஜேந்திர பாலாஜி

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக.-பாஜக கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள். மேலும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த நலன் கருதி சேர்ந்தாலும் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இவர்கள் கூட்டணி என்பது கட்டாய கல்யாணம் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்ததித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக- பாமக இடையே கட்டாய கல்யாணம் கிடையாது.

திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார். எப்போதும் அதிமுக, திமுக மட்டுமே களத்தில் இருக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும்.

திமுக கூட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறது. ஆனால் அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்வது என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் சூழலை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன என்று அவர் கூறினார்.

 

மேலும் படிக்க : அதிமுக-பாமக கூட்டணியில் அதிருப்தியா… கட்சியிலிருந்து வெளியேறிய முக்கியப்புள்ளி!?
 

.