This Article is From Dec 13, 2018

ப்ரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் தெரேஸா மே!

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தெரேஸா மேவுக்கு ஆதரவாக 200 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தது.

ப்ரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் தெரேஸா மே!

தனது கட்சி பிரதிநிதிகளிடம் நான் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்தார் தெரேஸா மே.

London:

இங்கிலாந்து பிரதமர் தெரேஸா மே ப்ரெக்ஸிட் விஷயத்தை தவறாக கையாண்டார் என்று எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை வென்றுள்ளார் மே.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தெரேஸா மேவுக்கு ஆதரவாக 200 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தது. பெரும்பான்மையை நிரூபித்தார் மே. 

முன்னதாக ரகசிய வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன் தனது கட்சி பிரதிநிதிகளிடம் நான் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்தார். 

பிரதமருக்கு ஆதரவான எம்பி ஒருவர் கூறும் போது  ''பிரதமருக்கு நிறைய அழுத்தம் இருந்தது, ஆனால் நிறை ஆதரவும் இருந்தது. இது அவரது தலைமைக்கான சவால்" என்று கூறியுள்ளார். 

நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு பின் பேசிய மே, ''ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக மக்கள் கேட்டதை தான் நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் இணைந்து வலிமையாக தேசத்தை உண்டாக்கவே விரும்புகிறோம்'' என்றார்.

மேலும், சொந்த கட்சியிலேயே தனக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்களின் கருத்தையும் கேட்கவுள்ளதாக 10 டெளனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு முன்னதாக தெரேஸா மே பதவி விலக வேண்டும் என்று சில எம்பிக்கள் வலியுறுத்தினர். தற்போது இந்தப் பிரச்சனைகளுக்கு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக மேயின் நெருங்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

.