Heavy rain in TN- வடகிழக்குப் பருவமழை (NEM) தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது
தமிழகத்தில் (Tamilnadu) வடகிழக்குப் பருவமழை (NEM) தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம், “அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வளிமண்டலத்தில் 3.1 கிலோ மீட்டரிலிருந்து 5.8 கிலோ மீட்டர் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவை, நீலகிரி, புதுக்ககோட்டை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது” என்று கூறியுள்ளது.