This Article is From Aug 07, 2020

சிறிய விலங்குகளை சுற்றிவளைத்த சிங்கக் கூட்டம்!- ஜெயிச்சது யார் தெரியுமா? வைரல் வீடியோ!

காட்டிற்கே ராஜாவாக கூறப்படும் சிங்கமோ, தேன் வளைக்கரடியிடம் இருந்து தள்ளி நின்றால் போதும் என்று விலகி விட்டது.

சிறிய விலங்குகளை சுற்றிவளைத்த சிங்கக் கூட்டம்!- ஜெயிச்சது யார் தெரியுமா? வைரல் வீடியோ!

தேன் வளைக்கரடியின் இந்த ஆக்ரோஷ வீடியோ 5 ஆயிரம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. 

தேன் வளைக்கரடிக்குச் சமம் தேன் வளைக்கரடிதான். பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு உயிரினம் இருப்பது தெரியாது. இது பெயருக்குத்தான் தேன் வளைக்கரடி. ஆனால், பசி எடுத்தால் எதை வேண்டுமானாலும் சாப்பிடும். எதிரே எந்த விலங்கு வந்தாலும் எதிர்த்து நிற்கும் என்பார்கள். இதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கிழக்கு ஷாம்பியாவில் உள்ள லுவாங்வா தேசிய பூங்காவில் பயணிகள் வாகனத்தில் அமர்ந்து உலா வந்துக் கொண்டிருந்தனர். அப்போது சிங்கங்கள் இரண்டு தேன் வளைக்கரடியை சுற்றி வளைத்தன. 

அவற்றில் ஒரு தேன் வளைக்கரடி மேட்டுப்பகுதியில் ஏறிச்செல்ல, மற்றொரு தேன்வளைக்கரடியை ஒரு சிங்கம் இழுத்துப் போட்டது. இதைப் பார்த்துதும், ஏறிச்சென்ற தேன் வளைக்கரடி, ஆக்ரோஷமாக இறங்கி வந்து, சிங்கங்களை எதிர்த்து நின்றது. அங்கிருந்த அனைத்து சிங்கங்களையும் தாக்க முயன்றது. ஆனால், காட்டிற்கே ராஜாவாக கூறப்படும் சிங்கமோ, தேன் வளைக்கரடியிடம் இருந்து தள்ளி நின்றால் போதும் என்று விலகி விட்டது.

 

இந்தக் காட்சியை அங்கிருந்த அப்துல்சிஸ் ஆதாம் என்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்திய  வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தேன் வளைக்கரடியின் இந்த ஆக்ரோஷ வீடியோ 5 ஆயிரம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

Click for more trending news


.