Read in English
This Article is From Aug 07, 2019

மாயிலையின் நற்குணங்கள் அறிவோம்!!

உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.  மாயிலையில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. 

Advertisement
Health Translated By

Highlights

  • மாயிலையில் பெக்டின் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
  • இரத்த சர்க்கரை அளவை குறைக்க மாயிலை பயன்படுகிறது.
  • இன்சுலின் அளவை அதிகரிக்க செய்யும் தன்மை மாயிலைக்கு உண்டு.

நம் வாழ்வியல் முறை சிக்கல் காரணமாக நம்மில் பலரும் நீரிழிவு நோயின் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறோம்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளையும், நம் தினசரி உடற்பயிற்சியை பொருத்துமே  உடலில் இரத்த சர்க்கரை அளவு இருக்கும்.  நீரிழிவு நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியம்.  இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதற்கு இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் தான் மாயிலை.  மாயிலையில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய தன்மை இருக்கிறது.  மாயிலையின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.   

மாயிலையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மேங்கிஃபெரின் என்னும் பொருள் உடலில் ஆல்ஃபா க்ளுக்கோசைடேஸ் என்னும் என்சைமை குறைக்கும் தன்மை கொண்டது.  குடல் பகுதியில் கார்போஹைட்ரேட் மெட்டபாலிசத்தை குறைத்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மாயிலையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.  

உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.  மாயிலையில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க மாயிலையை பயன்படுத்தலாம். 

10 முதல் 15 மாயிலைகளை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளவும்.  பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.  கொதித்த பின் ஒரு இரவு முழுக்க அப்படியே மூடி வைக்கவும்.  காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றி இதனை வடிக்கட்டி குடித்து வந்தால் நாளடைவில் நீரிழிவு நோயின் தீவிரம் குறையும்.  தொடர்ச்சியாக சில மாதங்கள் வரை இவ்வாறு செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.  

Advertisement
Advertisement