This Article is From Jun 08, 2018

சைக்கிள் பதில் பார்சலில் வந்த பல்லி!

பல்லியை வெளியே வந்தவுடன், ‘நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடக்கிறது’ என்பது போன்ற பார்வை அளித்தது

சைக்கிள் பதில் பார்சலில் வந்த பல்லி!

ஹைலைட்ஸ்

  • பேத்திகளுக்காக ஆன்லைனில் சைக்கிள் ஆர்டர் செய்த தம்பதி
  • சைக்கிளுக்கு பதில் பார்சலில் வந்த பல்லி
  • விலங்குகள் சேவை அதிகாரியிடம் ஒப்படைப்பு
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தம்பதியர் ஆன்லைனில் சைக்கிள் ஆர்டர் செய்திருந்தனர். ஆனால், வீட்டிற்கு வந்த பொருளை திறந்து பார்த்தால், டிராகன் பல்லி இருப்பது தெரியவந்தது. ஹெமெட் பகுதியை சேர்ந்த அல் ப்ரும்மெட் மற்றும் கிறிஸ் ப்ரும்மெட், வால்மார்டில் தங்களுடைய பேத்திக்கு சைககிள் ஆர்டர் செய்திருந்தனர். ஜூன் 6 ஆம் தேதி அன்று வீட்டிற்கு வந்த பார்சலை திறந்த பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“பெரிய டிராகன் பல்லி ஒன்று பார்சலில் இருந்தது, முதலில் மிகவும் பயந்து போனேன்” என்றார் திரு.ப்ரும்மெட்.

“பல்லியை வெளியே வந்தவுடன், ‘நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடக்கிறது’ என்பது போன்ற பார்வை அளித்தது”, மேலும் தொடர்ந்த அவர், “நானும், அதே சந்தேக பார்வையில் குழம்பி நின்றேன்” என்றார்.
 
 
 
விலங்குகள் சேவை அதிகாரிகள் ப்ரும்மெட்டின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்கு விரைந்தனர். பிடிப்பட்ட பல்லி ஆஸ்திரேலியா இனவகையை சார்ந்த டிராகன் பேர்டட் பல்லி எனவும், கலிபோர்னியாவில் செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு அங்கீகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

பிறகு, மிஸ்டர் லிசார்ட் எனப் பெயரிடப்பட்ட பல்லியை ரிவெர்சைடு நாட்டு விலங்குகள் சேவை அதிகாரி சன் ஜசிண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது. பீச்சு பழம் அளித்து பல்லிக்கு சிறுது ஊட்டச்சத்து அளித்தனர்.





 Click for more trending news


.