বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 17, 2019

Video: துப்பாக்கி வைத்து மிரட்டிய திருடன்… டிரிக்ஸாக எடுத்து கொள்ளையனை ஓடவைத்த பெண்!

Viral - இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கோரி ஃபிலிப்ஸ் என்பதும், கொள்ளைக்கு அடுத்த நாளே அவன் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 

Advertisement
விசித்திரம் Edited by

Viral - ஓட்டலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை படுக்கா காவல் துறை வெளியிட்டிருக்கிறது

ஓட்டலில் தனியாக இருந்த பெண் ஊழியரிடம், திருடன் ஒருவன் துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்றபோது ஒரு ‘தெறி' சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள படுக்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில், சில நாட்களுக்கு முன்னர் முகமூடி அணிந்த ஒரு கொள்ளையன், கையில் துப்பாக்கியுடன் திடீரென்று உள்ளே நுழைந்துள்ளான். ஓட்டலின் முகப்பில் ஒரேயொரு பெண் ஊழியர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம், இருக்கும் பணத்தை எடுத்தத் தரச் சொல்லி மிரட்டியுள்ளான் கொள்ளையன். 

அந்த ஊழியரும் இருக்கும் பணத்தை எடுத்து மேசை மீது வைத்துள்ளார். அந்தப் பணத்தை வாரிச் சுருட்டும்போது, கொள்ளையனுக்கு துப்பாக்கிப் பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது. இதனால், துப்பாக்கியை மேசை மீது வைத்துவிட்டு, பணத்தை அபேஸ் செய்ய முயன்றுள்ளான்.
 

சம்பவத்தின் வீடியோவை கீழே பாருங்கள்:

Advertisement

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த ஊழியர், துப்பாக்கியை டக் என்று எடுத்து கொள்ளையனை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் அரண்டு போன கொள்ளையன் உயிர் பிழைத்தால் போதும் என்று தலைத்தெறிக்க ஓடிவிட்டான்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கோரி ஃபிலிப்ஸ் என்பதும், கொள்ளைக்கு அடுத்த நாளே அவன் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 

Advertisement

ஓட்டலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை படுக்கா காவல் துறை வெளியிட்டிருக்கிறது. கொள்ளையனை தைரியமாக ஓடவைத்த அந்தப் பெண் ஊழியரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். 


 

Advertisement