This Article is From Aug 22, 2018

திருடி விட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துச் சென்ற வினோத திருடன்

4000 டாலர்கள் (2.70 லட்சம் ரூபாய்) மதிப்பிலான ஆடியோ, வீடியோ கருவிகளை திருடிச் சென்றிருப்பதாக தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருடி விட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துச் சென்ற வினோத திருடன்

அமெரிக்காவின் கனெக்டிகட்டில் கிறிஸ்துவ தேவாலயத்தில் நுழைந்த திருடன் ஒருவன், பல ஆயிரம் டாலர்கள மதிப்பிலான பொருட்களைத் திருடிவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.

அந்த கடிதத்தில் “ எனக்காக கடவுளிடம் வேண்டுங்கள். என்னை மனித்துவிடுங்கள். என்னை காப்பாற்றுங்கள்” என்று எழுதி இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திருடும் போது அவரது முகம் சோகமாக இருந்திருப்பதும் சி.சி.டி.வி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
 

 
 

4000 டாலர்கள் (2.70 லட்சம் ரூபாய்) மதிப்பிலான ஆடியோ, வீடியோ கருவிகளை திருடிச் சென்றிருப்பதாக தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு அன்று அதிகாலை ஒரு மணிக்கு இந்த திருட்டு நடந்துள்ளது. இதில் ஆச்சர்யபடும் விஷயம் என்ன என்றால், திருடன் கேட்டுக் கொண்டபடி அவனுக்காக தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

Click for more trending news


.